தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலத்தில் மின்வெட்டை அமுல்படுத்த எதிர்பார்க்கவில்லை என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி ஏப்ரல் 13 மற்றும் 14ம் திகதிகளில் மின்சாரம் தடை ஏற்படுத்தப்படாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அந்தக் காலப்பகுதிக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவும், இதனால் மின்வெட்டுக்கு அவசியம் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களில் மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சனிக்கிழமை இரண்டு மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதேபோல், ஞாயிற்றுக்கிழமைஒரு மணித்தியாலம் மாத்திரமே மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.