May 28, 2025 10:03:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கூட்டமைப்பின் இரா.சாணக்கியன் புதிய நிதி அமைச்சரா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் புதிய நிதி அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக குறிப்பிட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் குறித்த பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ள இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு வாழ்த்துகள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் பெயர் அந்த பதாகையில் உள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.