October 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மஹரகம ஆடை விற்பனை கடைத் தொகுதியில் தீ விபத்து!

மஹரகம பகுதியில் ஆடை விற்பனை கடைத் தொகுதியொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பமுணுவ வீதியில் உள்ள கடைத் தொகுதியிலேயே தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வியாழக்கிழமை இரவு, திடீரென அங்கு தீ பரவியுள்ளதுடன், அங்குள்ள ஆடை விற்பனை நிலையங்கள் பல எரிந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினரும், பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.