February 26, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் சிலவற்றுக்கு பூட்டு!

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்கள் சிலவற்றை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நோர்வேயின் ஒஸ்லோ,  ஈராக்கின் பாக்தாத் ஆகிய இடங்களில் உள்ள தூதரகங்களையும், அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள துணை தூதரகத்தையும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

டொலர் நெருக்கடி காரணமாக, அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.