
பாராளுமன்றத்தில் தான் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.பியான எஸ்.எம்.எம்.முஷாரப் அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியில் இருந்து ஆளும் கட்சிக்கு கடந்த காலங்களில் ஆதரவளித்து வந்த முஷாரப், மக்கள் பக்கமிருந்து சுயாதீனமாக இயங்க முடிவெடுத்துள்ளதாக இன்று சபையில் கூறினார்.
இதன்போது அவர் உரையாற்றிக் கொண்டிருக்கையில் எதிர்க்கட்சியினர் கூச்சலெழுப்பி, அவரை அமருமாறு கூறினர்.
இவ்வேளையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றிக்கொண்டிருந்த போது, எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண ஐயாயிரம் ரூபா நாணயத்தாளை அவரிடம் கொண்டு சென்றார். அதனை அவரிடமிருந்து வாங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாணக்கியன் எம்.பி, முஷாரப் எம்.பியிடம் நீட்டினார்.
இவ்வேளையில் ஆத்திரமடைந்த முஷாரப், ”நான் நாட்டு மக்களுக்காகவே பேச வந்துள்ளேன். டயஸ்போராவின் பணத்தை பெறுபவர்களுக்காக பேச வரவில்லை” என்றார்.
இதனையடுத்து சாணக்கியனை ஆசனத்தில் அமருமாறு சபாநாயகர் எச்சரித்தார்.