
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை இழந்துள்ளது.
அரசாங்கத்தில் அங்கம் வகித்த 42 உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்ததை தொடர்ந்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எம்.பிக்களின் எண்ணிக்கை 105 ஆக குறைவடைந்துள்ளது.
பாராளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 10 உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக அனுர பிரியதர்ஷன யாப்பா சபையில் அறிவித்தார்.
இதேவேளை தான் உள்ளிட்ட 10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 உறுப்பினர்களும் சுயேட்சையாக செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அத்துடன் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்களும் சுயேற்சையாக செயற்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகரிடம் அறிவித்தார்.
இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்களும் சுயாதீனமாக இயங்க முடிவெடுத்துள்ளனர்.