இலங்கை அமைச்சரவை முழுமையாக பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று இரவு கொழும்பு அலரிமாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையிலேயே அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது.
எனினும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தொடர்ந்து பதவியில் நீடிப்பார் எனவும் ஏனைய அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்கள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதிய அமைச்சரவை விரைவில் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.