பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பதவி விலகியதாக வௌியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
காபந்து அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இணங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்ததைத் தொடர்ந்து, பிரதமர் பதிவியில் இருந்து மகிந்த ராஜபக்ஷ பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் கொழும்பு ஊடகங்களில் வெளியாகின.
இதேவேளை தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் அவர் சமரப்பித்துள்ளதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிருந்தன.
இந்நிலையில் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட பிரதமர் ஊடக செயலாளர், அவ்வாறான செய்திகளில் உண்மையில்லை என்றும், பிரதமர் பதவி விலகத் தீர்மானிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.