பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கியதாக காபந்து அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இணங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோருடன் சென்று ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து இவ் விடயம் தொடர்பாக கலந்துரையாடியதாக விமல் வீரவன்ச கூறியுள்ளார்.
இதன்போது தற்போதைய அரசாங்கத்தை கலைத்துவிட்டு பாராளுமன்றத்தில் உள்ள சகல அரசியல் கட்சிகளையும் அழைத்து இவ் விடயம் தொடர்பில் கலந்து ஆலோசித்து உரிய கட்சிகளின் தொகைக்கேற்ப அமைச்சரவையைப் பங்கீட்டு தற்காலிக அரசாங்கமொன்றை நிறுவதற்கு இருவரும் சம்மதம் தெரிவித்ததாக வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பதவி விலகலாம் என்றும், புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.