மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு துரிதகதியில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மின்வெட்டு நேரத்தை கட்டம் கட்டமாக குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
இதன்படி அடுத்த சில நாட்களுக்குள் நாடு படிப்படியாக வழமை நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டே பிரதமர் அலுவலம் இதனை குறிப்பிட்டுள்ளது.