
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர்.
இவர்களின் பேரணி கொழும்பு சுதந்திர சதுக்கத்தை நோக்கி பயணித்த நிலையில், இடையில் வீதித்தடைகளை போட்டு பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால் பொலிஸாருக்கும் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சரத் பொன்சேகா, ராஜித சேனாரட்ன, சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், எம்,ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகளின் முக்கியஸ்தர்களும் அந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.
இவர்கள் கோட்டாபயவே வீட்டுக்கு போ, அரசாங்கத்தை விட்டு வெளியேறிச் செல்லுங்கள் என்று கோசங்களை எழுப்பியவாயு பயணித்தனர்.
எனினும் பொலிஸார் அவர்களை சுதந்திர சதுக்க பகுதிக்கு அனுமதிக்காத நிலையில், இடையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் பதற்றமான நிலைமையொன்றும் நிலவியது.