May 22, 2025 21:28:37

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்கை மீறிய 664 பேர் மேல் மாகாணத்தில் கைது!

இலங்கை முழுவதும் சனிக்கிழமை மாலை முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை மீறி வீதிகளில் பயணித்த 664 பேர் மேல் மாகாணத்தில் கைது செய்யபட்டுள்ளனர்.

நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு நேரத்தில் வீதிகள், மைதானங்கள், கடற்கரையோரங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் எவரேனும் இருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.