இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்குள் நுழைவதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
ஏப்ரல் 2 ஆம் திகதி நள்ளிரவு முதல் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் மற்றும் வட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் இயங்கவில்லை என்று பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடக தளங்களை முடக்கும் திட்டம் இருப்பதாக வதந்திகள் நேற்றிலிருந்து பரவின.
பின்னர், நேற்று நள்ளிரவில் இருந்து அவை இயங்கவில்லை என்று பயனாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இன்று இலங்கை முழுவதும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடக்க இருந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.