ஊரடங்கின் போது வீதி, பூங்காக்களில் எவருக்கும் இருக்க முடியாது என அறிவித்து ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஏப்ரல் 02 மாலை 6.00 மணி முதல் 04 ஆம் காலை 6.00 மணி வரை எந்தவொரு பொது வீதி, பூங்கா, பொழுதுபோக்கு இடங்கள், மைதானங்கள், புகையிரதப் பாதைகள், கடற் கரையோரம் போன்றவற்றில் எவருக்கும் நிற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊரடங்கு காலத்தில் அத்தியவசிய சேவைகளில் ஈடுபடும் மக்கள் தமது உத்தியோகபூர்வ அடையாள அட்டைகள் அல்லது அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வேறு ஏதேனும் ஆவணங்களை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்தலாம் என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.