இலங்கை முஸ்லிம்களுக்கு ஏப்ரல் 03 ஆம் திகதியில் இருந்து ரமழான் மாத நோன்பு ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
நோன்பை ஆரம்பிப்பதற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
இதன்போது, நாட்டின் பலபாகங்களிலும் ரமலான்ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதினால் நாளை முதல் புனித ரமலான் நோன்பு ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தின் 5 கடமைகளில் ஒன்றான நோன்பை, முஸ்லிம்கள் இஸ்லாமிய நாட்காட்டியின் 9 ஆவது மாதமான ‘ரமழான்’ மாதத்தில் நோற்கின்றனர்.