மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாவிட்டால் அரசாங்கத்திலிருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளியேறும் என்று இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணியால் தலவாக்கலையில் முன்னெடுக்கும் போராட்டத்தை தமது கட்சி எதிர்க்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே ஜீவன் தொண்டமான் இதனை கூரியுள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசின் பங்காளிக்கட்சியாக இருந்தாலும், மக்களை பாதுகாப்பதே எமது முதன்மை நோக்கமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியின் வீட்டுக்கு செல்லும் வீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் மக்கள்மீது நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.