பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு அரசாங்கத்திற்குள் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய பாராளுமன்ற அமர்வை முடிவுக்கு கொண்டு வந்து, அதனை ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்குள் சிலர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடவுள்ளது.
இதன்போது அரசாங்க தரப்பை சேர்ந்த குழுவொன்று எதிர்க்கட்சி பக்கம் செல்ல தயாராவதாக தகவல்கள் வெளியாகின்றன.
இந்நிலையில் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறையை காரணம் காட்டி பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.
அரசாங்கத்தில் இருந்து விலகி எதிரணிக்கு செல்வோம் என்றும், இதன்போது அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும் என்றும் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.
இதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கும் சில தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.