
இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட தலைமைப் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்யவுள்ளதாக ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
எதிர்வரும் புத்தாண்டுக்கு முன்னர் விவசாயிகளுக்கு நட்டஈடு மற்றும் உரம் வழங்குமாறு வலியுறுத்தி பதவி விலகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க பதவி வகிக்கின்றார்.