இலங்கையில் பிரபல வர்த்தகரான சித்தாலேப குழுமத்தின் ஸ்தாபகர் விக்டர் ஹெட்டிகொட காலமானார்.
சில காலங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த ஹெட்டிகொட தனது 84 ஆவது வயதில் காலமானதாக அவரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
தனது தந்தை ஹென்ட்ரிக் ஹெட்டிகொடவின் ஊடாக ஆயுர்வேதத்தில் பயிற்சி பெற்ற இவர், ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் பண்டைய ஆயுர்வேத மருந்துகளை அறிமுகப்படுத்தியிருந்தார்.
இதேவேளை விக்டர் ஹெட்டிகொட, இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார்.