January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு வலியுறுத்தல்!

மின்வெட்டு நிலைமையை கருத்தில் கொண்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கல்வி அமைச்சிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் முதலாம் தவணை விடுமுறையை அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் நீண்ட நேர மின்வெட்டு காரணமாக பாடசாலை மாணவர்கள் பல அசௌகரியங்களை எதிர்க்கொள்வதால், விடுமுறையயை அறிவிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.