இலங்கையின் மேல் மாகாணத்தில் இன்று நள்ளிரவு முதல் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
நள்ளிரவு 12 மணி தொடக்கம் நாளை காலை 6.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் கொழும்பில் சில பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று காலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.