அரசாங்கத்தில் இருந்து விலக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவோம் என்று அந்தக் கட்சியின் செயலாளரான அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பாராளுமன்றத்தில் கட்சிகளின் பங்களிப்புடன் காபந்து அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று தமது கட்சி தீர்மானித்துள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.