
இலங்கையில் சீமெந்தின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் 50 கிலோ கிராம் சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய 50 கிலோகிராம் சீமெந்தின் விலை 2,350 ரூபாவாக சந்தையில் விற்பனையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.