
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கு அருகில் நேற்று இரவு நடந்த போராட்டம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீரிஹான பகுதியில் நடந்த குறித்த போராட்டத்தின் போது, பொலிஸார், மற்றும் இராணுவத்தினர் போராட்டகாரர்களை கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.
இவ்வேளையில், இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் பொலிஸ் பஸ் ஒன்று, பொலீஸ் ஜீப் ஒன்று, மோட்டார் சைக்கிள்கள் இரண்டு சேதப்படுத்தப்பட்ட்டுள்ளன.
இதேவேளை 17 பொதுமக்கள், 17 பாதுகாப்பு படையினர் மற்றும் 3 ஊடகவியலாளர்கள் உட்பட 35 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் பெண்னொருவர், 4 ஊடகவியலாளர்கள் உட்பட 34 பேர் கைதுசெய்யப்பட்டு மிரிஹான பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.