ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கு அருகில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் அங்கிருந்த இராணுவ பஸ் ஒன்றுக்கு தீ வைத்துள்ளனர்.
மிரிஹான பெங்கிரிவத்தை சந்தியில் ஜனாதிபதியின் வீட்டுக்கு செல்லும் வீதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டாலும் மக்கள் தொடர்ந்து அங்கேயே நிற்கின்றனர்.
மக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது இராணுவத்தினர் வந்திருந்த பஸ் அங்கு வீதி ஓரத்தில் நின்ற நிலையில் அதற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.