January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதியின் வீட்டுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!

ஜனாதிபதியின் வீட்டுக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீரிஹான பெங்கிரிவத்தை சந்தியில் ஜனாதிபதியின் வீட்டுக்கு செல்லும் வீதியில் இன்று இரவு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்திற்கு எதிராகவும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

மக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த பகுதியில் தொடர்ந்தும் தங்கியிருப்பதால் அங்கு பதற்றமான நிலைமை நீடிக்கின்றது.

ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடிபடுவோர் கோசமெழுப்பி வருகின்றனர்.