January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். கொவிட் சிகிச்சை நிலைய மோசடி: விசாரணைக்கு பிரதமர் உத்தரவு!

யாழ்ப்பாணத்திலுள்ள கொவிட் சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ பணித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று இடைத்தங்கல் முகாம்களில் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மாயமாகியிருந்தமை கணக்காய்வு அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.

அத்துடன் வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருகின்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் கண்காணிப்பில் இந்த கொரோனா இடைத்தங்கல் முகாம்கள் செயற்பட்டுவந்துள்ளன.

இந்நிலையில், வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டுள்ள பிரதமர், இவ்விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.