January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவசரமாக மின் உற்பத்திக்கு டீசல் வழங்கும் லங்கா ஐஓசி!

Electricity Power Common Image

மின்சார உற்பத்தி தேவைக்காக உற்பத்தி 6000 மெட்ரிக் டொன் டீசலை இலங்கை மின்சார சபைக்கு வழங்க இந்தியாவின் லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

டீசல் பற்றாக்குறையால் நாட்டில் பல மணிநேரத்திற்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது.

இந்த நிலமையில் அவசரமாக 6000 மெட்ரிக் டொன் டீசலை வழங்க ஐஓசி நிறுவனம் இணங்கியுள்ளது.

எவ்வாறாயினும் நாட்டில் நிலவும் டீசல் தட்டுப்பாடு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கலாம் என்பதுடன், அதிக நேர மின்வெட்டும் தொடரலாம் எனவும் கூறப்படுகின்றது.