January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின்வெட்டால் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பாதிப்பு!

இலங்கை முழுவதும் 10 மணித்தியாலத்திற்கும் அதிகமாக மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதால் தொலைத் தொடர்பாடல் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சில பிரதேசங்களில் 3ஜி மற்றும் 4ஜி சேவைகள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இணைய சேவைகளின் வேகம் குறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நீண்ட நேரத்திற்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதால், தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தமது தொடர்பாடல் சமிக்ஞை கோபுரங்களுக்கு மின்பிறப்பாக்கிகள் ஊடாக மின்சாரம் வழங்குகின்ற போதும், எரிபொருள் பற்றாக்குறையால் அவற்றை தொடர்ந்தும் இயக்குவதில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.