January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின்வெட்டால் விழுந்த கொழும்பு பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த வர்தக நடவடிக்கைகளை 2 மணி நேரமாக மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.

அதன்படி மார்ச் 31 மற்றும் ஏப்ரல் முதலாம் திகதிகளில் முற்பகல் 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாத்திரம் பங்குச் சந்தை நாளாந்த வர்த்தகத்திற்காக திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அமுல்படுத்தப்படும் நீண்ட நேர மின்வெட்டு காரணமாகவே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த சில நாட்களாக கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.