October 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின்வெட்டு 15 மணித்தியாலங்களாக அதிகரிக்கலாம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமையால் தினசரி அமுல்படுத்தப்படும் மின்வெட்டு கால அளவு 15 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

இதேவேளை தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்திலும் தொடரலாம் என்றும் கூறப்படுகின்றது.

நீர் மின் உற்பத்திக்கான பிரதான நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவடைந்து வருவதால் நீர்மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று டீசல் பற்றாக்குறையால் அனல் மின்நிலையங்களின் மின் உற்பத்திகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆரம்பத்தில் இரண்டு மணித்தியாலங்களில் ஆரம்பிக்கப்பட்ட மின்வெட்டு நேரம் தற்போது 13 மணித்தியாலங்கள் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

15 மணித்தியால மின்வெட்டுக்கு இலங்கை மின்சார சபை அனுமதி கோரியிருந்த நிலையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்றைய தினத்தில் 13 மணித்தியாலங்களுக்கே அனுமதி வழங்கியுள்ளது.

எனினும் எதிர்வரும் நாட்களில் இது 15 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படலாம் என்று, மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான கிடைக்காவிட்டாலோ, நீர்த்தேக்க பகுதியில் போதுமான மழை பெய்யாவிட்டாலோ புத்தாண்டு காலத்தில் இருளில் இருக்க நேரிடலாம் என்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துநுவர தெரிவித்துள்ளார்.