November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகர விடுதலை!

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் போது நபரொருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் பிரேமலால் ஜயசேகர, முன்னாள் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் நிலந்த ஜயக்கொடி மற்றும் கஹவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்ஷன குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

தமக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்து செய்யுமாறு பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரும் மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்யப்பட்டிருந்தனர்.

இதன்படி, குறித்த மனுக்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அது தொடர்பான தீர்ப்பை அறிவித்தது.

இதன்போது தீர்ப்பை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸங்க பந்துல கருணாரத்ன, சம்பவம் இடம்பெற்ற போது பிரதிவாதிகளின் கைகளில் துப்பாக்கிகளில் இருந்தமை மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியமையக்கான சாட்சியங்கள் இல்லை எனவும் இதனால் அவர்களை விடுதலை செய்வதாகவும் தீர்ப்பளித்துள்ளார்.