
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்கு பின்னர் வெற்றிடமாக இருந்த இ.தொ.காவின் தலைமை பதவிக்கே செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் இ.தொ.காவின் தேசிய சபை இன்று கூடிய போதே செந்தில் தொண்டமான் கட்சியின் புதிய தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கட்சியின் நிதி செயலாளர் பதவியை வகித்த மருதபாண்டி ராமேஷ்வரன் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.