பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் பக்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சி பக்கத்தில் அமரவுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தான் உள்ளிட்ட 11 கட்சிகளை சேர்ந்தோர் இவ்வாறு எதிர்க்கட்சி பக்கத்திற்கு வருவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அரசாங்க பக்கத்தில் இருந்தாலும் சுயாதீனமாகவே தாம் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், விரைவில் எதிர்க்கட்சி பக்கத்திற்கு சென்று அங்கு தனியான அடையாளங்களுடன் புதிய எதிர்க்கட்சியாக செயற்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் இல்லாமல் போகும் என்றும் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த நேரத்தில் ஜனாதிபதி பதவி விலகுவதால் எந்தப் பலனும் இல்லை என கூறியுள்ள வீரவன்ச, அவர் பதவி விலகினால் பாராளுமன்றத்தில் தானாகவே பஸில் ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதியாக வாய்ப்பு கிடைத்துவிடும் என்றும் இதற்கு இடமளித்துவிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் உரையாற்றும் போதே விமல் வீரவன்ச இவற்றை தெரிவித்துள்ளார்.