January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மலசலகூட குழியில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

பாணந்துறை பகுதியில் ஹோட்டல் ஒன்றின் மலசலகூட குழியில் இருந்து இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

26 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்தப் பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பை சேர்ந்த நபர் ஒருவருடன் அந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை அங்கு, சிலருடன் அந்தப் பெண் தொடர்புகளை பேணியுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கொலை செய்யப்பட்டு அந்தப் பெண் மலசலகூட குழியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பாணந்துறையில் உள்ள சுற்றுலா விடுதியான அந்த இடத்தில் யுவதியுடன் மூன்று பேர் நெருங்கிய தொடர்பை வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.