
கொழும்பு பங்குச் சந்தையின் பங்குப் பரிவர்த்தனை விலைச் சுட்டி, இன்றைய தினத்தில் பெருமளவு வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, அனைத்துப் பங்குகளின் (ASPI) விலைச் சுட்டி முந்தைய தினத்தை விடவும் இன்று 494.74 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய பரிவர்த்தனை முடிவில் 10,178.56 புள்ளிகளாக காணப்பட்ட அனைத்து பங்குகளின் விலைச் சுட்டி, இன்றை தினம் பரிவர்த்தனை முடிவில் 9647.55 புள்ளிகளாக காணப்பட்டது.
இது 4.88 வீத வீழ்ச்சியாகும் என்று கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
இதேவேளை, S&P SL20 விலைச் சுட்டியும் 4.77 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
மார்ச் 25 ஆம் திகதி முதல் பங்குச் சந்தை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.