June 15, 2025 15:35:46

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”எனக்கு பிரதமர் பதவியா?”: ரணில் கூறும் பதில்!

நாட்டின் பிரதமராக பதவியேற்குமாறு தனக்கு இதுவரையில் எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில், சர்வதேச ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளும் வகையில், மகிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அந்தப் பதவியை வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ரணில் விக்கிரமசிங்க, ”தனக்கு பிரதமர் பதவியை ஏற்றுமாறு அழைப்பெதுவும் விடுக்கப்படவில்லை. அந்தப் பதவியை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் எனக்கில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.