January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ்க் கட்சிகள்!

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் சந்தித்துள்ளன.

இன்று பிற்பகல் தனித்தனியாக அந்தக் கட்சிகள் ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளன.

கொழும்பில் இந்த சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சார்பில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் அவரை சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் வீ.இராதாகிருஷ்ணன் ஆகியோர் ஜெய்சங்கரை சந்தித்து மலையக மக்கள் பிரச்சனைகள் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

அந்தக் கட்சியின் சார்பில் ஜீவன் தொண்டமாம் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.