January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவிடம் மேலும் ஒரு பில்லியன் டொலரை எதிர்பார்க்கும் இலங்கை!

நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை இந்தியாவிடம் இருந்து மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இருதரப்பினருக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டு ‘ரொய்ட்டர்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்தார்

2020 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 70 வீதத்தால் குறைவடைந்துள்ளமையினால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்வதில் இலங்கை சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இதனால் இலங்கையில் ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியா ஒரு பில்லியன் டொலர் கடனை வழங்கியுள்ள நிலையிலேயே இலங்கை மீண்டும் இந்தியாவிடம் நிதி உதவியை கோரியுள்ளது.