January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். கலாச்சார மத்திய நிலையம் திறந்து வைப்பு

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

யாழ். பொது நூலகத்தின் அருகில் இந்த கலாச்சார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, புதிய கலாச்சார மத்திய நிலையம் தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையத்தை, இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து கொழும்பில் அலரிமாளிகையில் இருந்தவாறு வீடியோ தொழில்நுட்பம் ஊடாக திறந்துவைத்தார்.

இதேவேளை, திறந்து வைக்கப்பட்ட கலாச்சார நிலையத்தில், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.