January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையம் சென்ற இந்திய அமைச்சர்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

கொழும்பின் புறநகரிலுள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்புநிலையத்திற்கு அவர் சென்றிருந்தார்.

இதன்போது ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா எரிபொருள் விநியோக நிலைமை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் விளக்கியுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஜெய்சங்கர், ”500 மில்லியன் டொலர் இந்திய கடனுதவி இலங்கை மக்களின் அன்றாட வாழ்வுக்கு உதவுகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.