January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு – மொஸ்கோ இடையே விமான சேவையை நிறுத்தியது ஸ்ரீலங்கன்!

கொழும்பு – மொஸ்கோ இடையிலான விமான மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

ரஷ்யா – யுக்ரைன் மோதல் நிலைமையால் மார்ச் 28 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் நிலைமை வழமைக்கு திரும்பிய பின்னர் மீண்டும் விமான சேவைகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – மொஸ்கோ இடையே வாரத்திற்கு இரண்டு தடவைகள் ஶ்ரீலங்கன் நிறுவனம் விமான சேவைகளை முன்னெடுத்தது.