இலங்கையில் இருந்து தப்பிச்சென்று, வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 130 பேருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இவர்களில் அதிகமானோர் டுபாயில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவர்களின் இலங்கையிலுள்ள சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இலங்கையில் கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் போது, போதைப் பொருள் விற்பனையுடன் தொடர்புடைய 95,000 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 1630 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.