இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை குறித்து பாரளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசாங்கம் இணங்கியுள்ளது.
ஏப்ரல் மாதம் முதலாம் வாரத்தில் அது தொடர்பான விவாதத்தை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொரடாவான அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்து மார்ச் 25 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும், அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையிலேயே அரசாங்கம் அதற்கு இணங்கியுள்ளது.