April 22, 2025 19:50:31

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து மீண்டும் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பம்!

கொழும்பு, இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து மீண்டும் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விமான நிலையத்தின் புதிய ஓடுபாதை 220 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று முற்பகல் நடைபெற்றது.

இந்த ஓடுபாதையில் மாலைதீவில் இருந்து வந்த விமானம் முதலாவதாக தரையிறங்கியது.

இதன்படி இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து முதலில் மாலைதீவிற்கான விமான சேவை ஆரம்பமாவதுடன் பின்னர் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுக்கும் இங்கிருந்து விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படும்.

இரத்மலானை சர்வதேச விமான நிலையம் 55 வருடங்களின் பின்னர் இன்று தொடக்கம் மீண்டும் தனது சர்வதேச விமான சேவையை ஆரம்பிக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

குறைந்த செலவிலான விமான பயணங்களை மேற்கொள்ள சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான நிதியை சிவில் விமான சேவைகள் அதிகார சபை, விமான நிலையம் மற்றும் ஏவியேஷன் நிறுவனம் முதலீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

This slideshow requires JavaScript.