இலங்கையில் 7.7 மில்லியன் பேர் கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை 14.4 மில்லியன் பேர் முதல் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர் என்றும், அவர்கள் மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டரை பெற்றிருந்தால் மாத்திரமே பூரண தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களாக கருப்படுவர்கள் என்றும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஏப்ரல் 30 முதல் நாட்டில் தெரிவு செய்யப்பட்ட பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் கூடிய விரையில் அதனை பெற்றுக்கொள்ளுமாறு தொற்று நோய் தடுப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி முழுமையான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள பொது இடங்கள் தொடர்பான பட்டியலை விரைவில் சுகாதார அமைச்சு வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.