January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின்னல் தாக்கி 25 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கேகாலை – மாவனெல்ல பிரதேசத்தில் இன்று மாலை மின்னல் தாக்குதலுக்கு உள்ளான 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவனல்லை பாமினிவத்தையில் உள்ள மயானத்தில் இறுதிக் கிரியை நிகழ்வொன்றில் கலந்துகொண்டவர்களே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்தப் பிரதேசத்தில் இன்று மாலை கடுமையான மின்னல் தாக்கம் இருந்த நிலையில், குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர் மீது மின்னல் பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது அதிர்ச்சிக்கு உள்ளான நிலையில் 25 பேர் மாவனெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடையே சிறுவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.