January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இடி மின்னல் தாக்கி கணவன்,மனைவி பலி; திருக்கோவிலில் சம்பவம்

அம்பாறை, திருக்கோவில் சாகாமம் பகுதியில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது வீழ்ந்த இடி மின்னல் தாக்குதலில் இருவர் உயிரிழந்த சம்பவம் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில், விநாயகபுரம் பழைய தபாலக வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய 3 பிள்ளைகளின் பெற்றோரான யோகேஸ்வரன், ஜெயசுதா ஆகிய கணவன், மனைவியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சாகாமம் தேசிய நீர் வடிகால் சபை தண்ணீர் தாங்கிக்கு அருகாமையில் உள்ள தமது காணியில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் வழமைபோல் காலையில் சென்று சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

குறித்த இருவரது சடலமும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.