January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகம் செல்வோரைத் தடுக்க இலங்கை கடற்பரப்பில் விசேட கண்காணிப்பு!

இலங்கையிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்கு செல்ல முயற்சிப்பவர்கள் தொடர்பில் கண்காணித்து வருவதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமையால் கடந்த தினங்களில் 16 பேர் வரையிலானோர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்.

இதேவேளை மேலும் பலர் இலங்கையில் இருந்து தமிழகம் வரவுள்ளதாக அங்கு சென்ற இலங்கையர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கடல் மார்க்கமாக தப்பிச்செல்லும் பகுதிகள் தொடர்பில் ஆராய்ந்து பாதுகாப்பை பலப்படுத்தி வருவதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கையில் இருந்து வரும் அகதிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக தமிழக அரவு தெரிவித்துள்ளது.

தற்போது தமிழகம் சென்றுள்ளவர்கள் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை தமிழக அரசின் அயலக தமிழர் நலன், மறுவாழ்வுத்துறை ஆணையாளர் ஜெசிந்தா லோரன்ஸ் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் இருந்து வருவோருக்காக மண்டபம் முகாமில் உள்ள 147 குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.