இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மார்ச் 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
மூன்று நாள் விஜயமாக அவர் இலங்கை வருவார் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல முக்கிய உடன்படிக்கைகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குவதற்கு இந்தியா முன்வந்திருந்தது.
இதேவேளை, இருநாடுகளுக்கும் இடையே சில உடன்படிக்கைகளை செய்துகொள்வதற்கும் இணக்கம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.